தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காந்தி தெருவில் புனரமைக்கப்பட்ட இந்து தொடக்கப் பள்ளியை, முன்னணி மேலாண்மை நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஈக்யூ இந்தியா திறந்து வைத்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் இ.மாரிதங்கம், செயலர் ஆர்.சிவசுப்ரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஈக்யூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:
பள்ளிக் கட்டிடத்தை புனரமைப்பதன் மூலம் கிராமப்புறங்களில் கல்வி மற் றும் உள்கட்டமைப்பை மேம் படுத்துவதை ஈக்யூ இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த இந்து ஆரம்பப் பள்ளியின் பாழடைந்த கட்டுமானத்தை உடனடியாக புனரமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஈக்யூ இந்தியா கடந்த ஏப்ரல் 2020- ல் புனரமைப்பை துவங்கியது.
இப்பள்ளியில் 3 புதிய வகுப்பறைகளை கட்டிய துடன், கழிவறைகளைப் புனரமைத்ததன் மூலம் மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வை உறுதி செய்தோம்.
புனரமைப்பு
திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக புனரமைப்பு பணிகளை தொடர்ந்து பார்வையிடும் நான்கு தன்னார்வலர்களை பரிந்துரைத்துள்ளோம். புனர மைப்பு பனி திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 2023-ல் முடிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயலும் ஈக்யூ இந்தியாவின் நோக்கத்தை எடுத்து காட்டாக விளங்குகிறது என்றார்.
கார்ப்பரேட் சமூகப் பொறுப்புக் குழுவுடன் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிய ராமகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் இ.மாரிதங்கம் அளித்த சிறப்பான ஒத்துழைப்பை பாராட்டினார்.