fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் சேலஞ்ச் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன்

தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் சேலஞ்ச் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக் காக தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் சேலஞ்ச் (NEBC’23) போட்டியில், பச்சாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், விருதுகளையும் வென்றது.
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இப்போட்டி நடந்தது.

இதில் இந்தியா முழுவதில் இருந்து மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் கொண்ட குழு பங்கேற்றது.

இக்குழு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், 5 பிரிவு வாரியாக விருதுகளையும் பெற்று ரூ.80 ஆயிரம் ரொக்கப்பரிசையும் அள்ளியது.

சாம்பியன் பட்டத்தைப் பெற உதவியாக இருந்த கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குழுவினை எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.பால்ராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img