நாமக்கல்லில் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் கோஸ்டல் ஹோட்டலில் செய்தியாளர்களை சந் தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:
நாமக்கல் மாவட்ட த்தில் பட்டியல் மற்றும் அருந்ததியர் இன மக்கள் தாக்கப்படும்போது பாதிக் கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, காவல்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மக்களை தாக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தரும் புகார்களை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுகிறார்கள்.
பாஜக கால் பதித்து விடக்கூடாது என்பதற்காக திமுக ஆட்சி அமைய தமிழகம் முழுவதும் தமிழ் புலிகள் கட்சி தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல் செயல்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டை வைக்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி பட்டியல் இன மக்கள்மீது நடத்தப்படும் வன்முறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை உத்தரவிட வேண்டும். பட்டியல் இன மக்கள் மீதான உரிமை மீறப்படும் போது, தமிழ் புலிகள் கட்சி செயல்படும்.
சாதிய பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
மாவட்ட காவல்துறையின் முறையற்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு செயலாற்றினோம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரிப்போம்.
இந்த தேர்தலில் தமிழ் புலிகள் கட்சிக்கு போட்டி யிட வாய்ப்பு வழங்க வேண்டும். திமுக அதற்கான வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம். 2026- ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் பாஜக போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாது.
பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு நடத்தும் முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு அல்ல. பாஜக தமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை என்ற நிலமை வந்த பிறகு, கடவுளின் பெயரால் மத கலவரங்களை உருவாக்கி, அரசியல் செய்து கால் பதிக்கக்கூடிய அரசியலை வட மாநிலத்தில் செய்து வருகிறார்கள். கேரளாவில் ஐயப்பன், மகாராஷ்டிராவில் துர்கா, உத்தரபிரதேசத்தில் ராமர் என மாநிலத்திற்கு ஏற்றார் போல கடவுளை முன் வைத்து பாஜக அரசியல் ஆட்சி செய்கிறது.
அதேபோல தமிழ கத்தில் முருக கடவு ளை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு இழுக்கிறார்கள்.
ஆன்மிகத் தை அரசியலோடு தொடர்பு படுத்தக் கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் நினைக்கின்ற அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநில அமைப்பு செயலாளர் ஹிட்டாச்சி சிவா, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் டாக்டர். குமரவேல், வினோத் சேகுவேரா,மாதேஸ்வரன், சுரேஷ், அழகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



