சென்னையில் எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பில் மக்களின் நம்பிக்கை பெற்ற சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை, தற்போது அண்ணா நகரில் ரோபோடிக் உதவியுடன் முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் VELYS என்ற முன்னணி நிறுவனத்தால் உருவாக் கப்பட்ட இந்த ரோபோடிக் இயந்திரத்தை, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.பிரகாஷ் செல்வம் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராதிகா வேணுகோபால் ஆகி யோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த மருத் துவ மற்றும் அறுவை சிகிச்சையில் அனுபவ முள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் தலைமையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி, விபத்தில் சிக்கியவர்களுக்கு மூட்டு அறுவை சிகிச்சை, விளையாட்டு வீரர்களின் காயங்கள் மற்றும் மறுவாழ்வு போன்ற பலத்துறை நிபுணர்களின் அணி இயங்குகிறது.
இது குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் செல்வம் கூறியதாவது:
VELYS ரோபோடிக் இயந்திரத்தின் அறுவை சிகிச்சை என்பது ஒரு துல்லியமான அறுவை சிகிச்சை. இதனால் திசுக்களின் சேதம் குறைகிறது, இரத்த இழப்பைக் குறைக்கிறது மற்றும் நோயாளிகள் மூட்டு பிரச்சனையிலிருந்து அதி விரைவில் சரியாவதற்கு பயன்படுகிறது. அறுவை சிகிச்சைகள் மருத்துவரின் திறமையை சார்ந்து இருக் கும் ஆனால், ரோபோடிக் தொழில்நுட்பம் மேம்பட்ட மேப்பிங் மற்றும் நிகழ்நேர தரவு களைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நோயாளியின் தனித்துவமான எலும்புக ளின் அமைப்பிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சை தனித்துவம் ஆகிறது. சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனை, ரோபோடிக் அறுவை சிகிச்சையை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமல்லாமல், இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுகட்டமைப்பு போன்ற பிற மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



