சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கவிழா நேற்று ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடை பெற்றது. இவ்விழாவில், லக்ஷ்மணன் (Head – Campus Hiring, VVDN Technologies), ஞானசேகரன் (Block Education Officer, School Education) ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தனது தலைமையுரையில், கடந்த 68 வருடங்களாக ஒழுக்கத் துடன் கூடிய சிறப்பான கல்வியை இக்கல்லூரி வழங்கி வருகிறது என்று கூறினார்.
மேலும், இக்கல்லூரியின் முன்னாள் மாண வர்கள் உலகளவில் சிறந்த தொழில்முனை வோர்களாகவும், முன்னணித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இக்கல்லூரி யிலுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி, வாழ்வில் மேன்மேலும் வளர்ந்து கல்லூரிக்கும், பெற்றோருக்கும் நற் பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
கல்லூரியின் துணைத் தலைவர் சொக்கு வள்ளியப்பா வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா மாணவர்கள் தொழில்சார்ந்த திட்டங் களை செய்ய வேண்டும் என்றும், ஸ்டார்ட் அப் செயல்முறை மூலமாக இளம் தொழில்முனை வோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரியின் முதல்வர் கனகராஜ் தமது உரையில் கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, புதுமை யான கற்றல் முறைகள், கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள், மாணவர்களின் சாதனைகள், கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரியின் இயக்குனர் கார்த்திகேயன், சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தங்களின் சிறப்பான அனுபவங்களை முதலாமாண்டு மாணவர் களுடன் பகிர்ந்து கொண் டனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.



