fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு ரோட்டரி சங்கம் வழங்கிய ‘சேஞ்ச் மேக்கர்’...

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு ரோட்டரி சங்கம் வழங்கிய ‘சேஞ்ச் மேக்கர்’ விருது

டாக்டர் தவமணி தேவி பழனிசாமி முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணை தலைவராகவும் டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

அவர் கேஎம்சிஹெச் குழுமத்தின் தலைவருமான டாக்டர் நல்லா ஜி பழனிசாமியுடன் இணைந்து டாக்டர் என்ஜிபி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையை 1990-ம் ஆண்டு துவக்கினார்.

டாக்டர் தவமணி தேவி பழனிசாமி குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்கான சிறப்பு மருத்துவராக சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது மருத்துவத் துறையில் அவரது நீண்ட அனுபவம் நவீன வசதிகளுடன் தரமான கல்வி அளிப்பதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் துவக்கிட ஊக்கமளிப்பதாய் அமைந்தது.

தற்போது மருத்துவ அறிவியல், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, சிபிஎஸ்ஈ பள்ளி என 10 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 15000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு பல சாதனைகள் புரிந்துவரும் டாக்டர் தவமணி தேவி பழனிசாமியை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி சார்பாக அவருக்கு சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி சார்பில் பெண்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சி கோவை நிர்மலா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சர்வதேச ரோட்டரி முன்னாள் இயக்குனர் எம்டி ஏ.எஸ்.வெங்கடேஷ் முதன்மை விருந்தினராகவும் ரோட்டரி மாவட்ட கவர்னர் ஏகேஎஸ் என்.சுந்தரவடிவேலு கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரை நிகழ்த்தினார்.

நிர்மலா பெண்கள் கல்லூரி முதல்வர் முனைவர் மேரி ஃபேபியோலா, செயலாளர் முனைவர் குழந்தை தெரசா, ரோட்டரி 3201 உதவி கவர்னர் சி.டி.ராமசாமி, கவர்னர் குரூப் பிரதிநிதி ஏ.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது

அதுசமயம் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மருத்துவம் மற்றும் கல்வித் துறைக்கு ஆற்றியுள்ள மிகச்சிறந்த பங்களிப்பிற்காகவும், மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதற்காகவும் அவரைப் பாராட்டி “சேஞ்ச் மேக்கர்” என்ற விருது வழங்கப்பட்டது

டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தனது ஏற்புரையில் இந்த விருது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்கால தேவைகளைப் பூர்த்திசெய்யவும், சமூக மாற்றத்தை சரியான திசையில், சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லவும் இதுபோன்ற அங்கீகாரங்கள் உந்துசக்தியாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img