வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசுகையில் பன்முக திறமை கொண்ட பெண்களை போற்றி கொண்டாடுவது நமது கடமை என்றும் பெண்களுக்கு கல்வி வழங்குவது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பாதுகாப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார்.
பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 8ம் நாள் சர்வதேச மகளிர் தினமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா 7ம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை வகித்து வரவேற்று பேசியதாவது: குடும்பத்திலும், சமுதாயத்திலும் மகளிரின் பங்களிப்பு மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் இங்கு விழா நடத்தப்படுகிறது.
நறுவீ மருத்துவமனையில் பெண்க ளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்படுகிறது. நமது நாட்டை தாய்நாடு என்றும் நமது மொழியை தாய் மொழி என்று தான் அழைக்கிறோம். தந்தை நாடு என்றோ தந்தை மொழி என்றோ கூறுவதில்லை.
நறுவீ மருத்துவமனை மகளி ருக்கு அதிகாரம் அளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இங்கு பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பெண்களாக உள்ளனர். இது பெண்கள் நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகளிர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. நாள் தோறும் பெண்களைப்போற்றும் விதமாக மகளிர் தினத்தை நாம் தினமும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்ததுவிளக்கு ஏற்றி வைத்து சர்வதேச மகளிர் தினத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நறுவீ மருத்துவமனை சர்வதே அளவில் சிறந்த மருத்துவ சேவை அளித்து வருவது பாராட்டுக்குரியது. குடும்பத்தின் ஆணிவேராக விளங்கம் பெண்கள் குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல முறையில் பராமரிப்பதை தமது கடமையாக கருதி அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
எனவே, பெண்கள் சமுதாயத்தை நாம் போற்றி பாராட்ட வேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தை ஆண்டுக்கு ஒரு முறை இன்றி நாள்தோறும் நாம் கொண்டாட வேண்டியது நமது கடமை. பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும். பெண்கள் கல்வி கற்பது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவம னை நல மருத்துவர் டாக்டர் அஸ்வதா, மனநல மருத்துவர் டாக் டர் நர்மதா ஆகியோர் பங்கேற்று சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்பது பற்றி பேசினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியருக்கு நறுவீ மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதில் மருத்துவமனை செயல் இயக்கநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை செவிலியர் துறை மேலாளர் ஆனந்தி வரவேற்றுப் பேசினார். முடிவில் மனிதவளத் துறை இணை மேலாளர் அருணா நன்றி தெரிவித்தார்.



