fbpx
Homeபிற செய்திகள்சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து பீளமேடுபுதூர் அலுவலகத்தில், சாலை பாது காப்பு வார விழா நிகழ்வு நடை பெற்றது. சுரேஷ் தலைமை தாங்கினார்.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் ஆக்சன் கிளப் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும், வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல், தனசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

போக்குவரத்து அலுவலர் பாலமுருகன் சிறப்புரையாற்றி னார். கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அதில் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் அனை வரும் கட்டாயம் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்

கார்களில், பயணிக்கும் ஓட்டுனர்கள் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும், ஓட்டுனர்கள் ஓய்வுஎடுத்த பின் னால் வாகனங்கள் இயக்க வேண்டும், மது போன்ற போதை வஸ்துக்களை உபயோகித்து வாகனம் ஓட்டக்கூடாது, சாலையில் ஆங்காங்கே உள்ள சமிக்கை பலகைகளை கண்டும், சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை கோடுகளை கண்டும் அதன் படி செயல்பட வேண்டும்,

வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தில் ஆர்சி புக் நகல்கள், இன்சூரன்ஸ் நகல்கள் புகை சான்று நகல் போன்றவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் கட்டாயம் வழி விட வேண்டும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் உரிமம் பெற்ற பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img