அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும் என்று கரூரில் நடைபெற்ற அரசு பள்ளிகளுக்கு மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள் ளியணை, ஜெகதாபி, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ் ணராயபுரம் சின்னம்ம நாயக் கன்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.30 -லட்சம் மதிப்பில் மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலை மையில் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக தாந் தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், அரசு மாதிரி பள்ளி மண்டல ஒருங் கிணைப்பாளரும், ஜெகதாபி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான தீனதயாளன், இருபால் ஆசிரியர்கள், ஒன்றிய துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“இல்லம் தேடி கல்வி”
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி கூறியதாவது: அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும். கொரோனா காலத்திலும் மாணவ- மாணவியரின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தினார்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் பிள்ளைகளை உயர்கல்வி பயில்வதற்கு வசதி இன்மை காரணமாக பெரும்பாலானோர் அனுமதிப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தி உள் ளார், என்றார்.