fbpx
Homeபிற செய்திகள்மசகு எண்ணெய் தயாரிப்பில் ‘பிரேக்ஸ் இந்தியா’புதிய ‘ரிவியா’ பிராண்ட் அறிமுகம்

மசகு எண்ணெய் தயாரிப்பில் ‘பிரேக்ஸ் இந்தியா’புதிய ‘ரிவியா’ பிராண்ட் அறிமுகம்

ஆட்டோமொபைல் துறையில் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயர் பெற்றுள்ள பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது வாகனங்களுக்குத் தேவையான மசகு எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டு, புதிதாக ‘ரிவியா’ என்ற பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு 60 ஆண்டு களுக்கும் மேலாக நாடு முழுவதும் உள்ள விநி யோகஸ்தர்கள் ஒருங்கிணைப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்க நடவடிக்கையாக இன்ஜின் ஆயில் உற்பத்தியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. கார் மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கான ஆயிலை புதிய பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்துகிறது.

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் எஸ். சுஜித் நாயக் கூறியதாவது: டிவிஎஸ் கிர்லிங், டிவிஎஸ் அபாச்சே, டிவிஎஸ் ஸ்பிரின்டர் பெயரில் உதிரி பாகங்களை இந்நிறுவனம் தயாரித்து சப்ளை செய்கிறது.

ரிவியா எனும் பெயரிலான புதிய பிராண்டில் இன்ஜின் ஆயிலை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ரிவியா இன்ஜின் ஆயில் பலதரப்பட்ட மசகு எண்ணெய்களை 9 கிரேடு தரத்திலும், கார்களுக்கான இன்ஜின் ஆயில் 5 ரகங்களிலும், வர்த்தக வாகனங்களுக்கு 4 ரகங்களிலும் தயாரித்து அளிக்கிறது.

நிறுவனம் சிந்தடிக் ரசாயன வகைகளாக எஸ்யுவி மற்றும் எம்யுவி வாகனங்களுக்கு தேவையான இன்ஜின் ஆயிலை ரிவியா 15டபிள்யூ40 சிகே4 அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் பாரத் புகை விதி 6-க்கு ஏற்பவும், புதிய தலைமுறை வாகன இன்ஜின்களுக்கு உகந்தவையாகவும் தயாரிக்கப்படுகின்றன.

ரெவியா இன்ஜின் ஆயில் வாகன இன்ஜினுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img