fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் டெக் ஸ்டார் உச்சி மாநாடு

சிமாட்ஸ் டெக் ஸ்டார் உச்சி மாநாடு

சிமாட்ஸ் இன்ஜினியரிங் (SSE) அதன் 4-வது TECH STAR SUMMIT2023 கடந்த 26-ம் தேதி துவங்கியது. வரும் 29-ம் தேதி வரை சென்னையில் உள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸில் நடைபெறுகிறது.

தலைமை விருந்தினர் பேராசிரியர் அப்பா ராவ் பொதிலே, முன்னாள் துணைவேந்தர், ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் கௌரவ விருந்தினர் நமிதா குப்தா, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (DST) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் (DST) ஆலோசகர் / விஞ்ஞானி ஜி, சிமாட்ஸ் இன் கல்வியியல் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசுவாமி , சிமாட்ஸ் இன்ஜினியரிங் இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், SIMATS பதிவாளர் டாக்டர் ஷீஜா வர்கீஸ், சிமாட்ஸ் முதல்வர் டாக்டர் பி. ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் டெக் ஸ்டார் உச்சிமாநாட்டை துவக்கி வைத்தார்.

ஆராய்ச்சி யோசனை

சிமாட்ஸ் இன்ஜினியரிங், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பல மைல்கற்களை எட்டி, மாணவர்கள் தங்கள் புதுமையான மற்றும் சுவாரஸ்யமான ஆராய்ச்சி யோசனைகளை ஆராய்ச்சிகளை வண்ணமயமாக முன்வைக்க ஒரு தளத்தை வழங்குவதற்காக சவீதா டிரான்ஸ்டிசிப்ளினரி வருடாந்திர ஆராய்ச்சி (STAR)உச்சிமாநாடு தான் TECH STAR SUMMIT

உச்சிமாநாடு இறுதியாண்டு மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் SIMATS -ன் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த முறை 4 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 250 மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை பல்வேறுத் துறை வல்லுநர்கள், IIT மற்றும் NIT ஆசிரியர்கள் போன்ற பல்வேறு அழைக்கப்பட்ட பிரிவுகளுக்கு ஆர்வத்துடன் காட்சிப்படுத்துவார்கள்.

இதுபோன்ற உச்சிமாநாடுகள் மாணவர்களுக்கு ஆராய்ச்சியின் நுண்ணறிவுகளைப் பெற உதவுவதோடு, நிகழ்நேரச் சிக்கல்களைச் சமாளிக்கும் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் என்று சிமாட்ஸ் பல்கலைக்கழகம் நம்புகிறது.

படிக்க வேண்டும்

spot_img