fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சுவாச மண்டல தீவிர சிகிச்சை கருத்தரங்கம்

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சுவாச மண்டல தீவிர சிகிச்சை கருத்தரங்கம்

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை யில் சுவாச மண்டல தீவிர சிகிச்சை குறித்த “ஐ.சி.யு அப்டேட் 2026” 15-வது வருடாந்திர கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தத் துறையில் புகழ்பெற்ற தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்கள் தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதல் நாளில் செயற்கை சுவாசக் கருவிகளை கையாளுதல் மற்றும் நுண்துளை பரிசோதனை குறித்து மருத்துவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் நாளில் நிபுணர்கள் கலந்துகொண்டு, சுவாச சிகிச்சை யில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் எக்மோ சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

இது குறித்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள் கூறுகை யில்,”தீவிர சிகிச்சையில் சுவாசக் கோளாறுகளைக் கையாளுவது ஒரு சவாலான விஷயம். உலகத்த ரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை இப்பகுதி மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம்“ என்றார்.

கேஎம்சிஹெச் செயல் இயக் குனர், தீவிர சிகிச்சைப் பிரிவை உலகத்தரமானதாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் டாக்டர் கோபிநாதன், டாக்டர் யுவராஜ் மற்றும் அவர்களது குழுவினரை டாக்டர் அருண் பழனிசாமி பாராட்டி வாழ்த் தினார். மேலும் இந்தத் துறையில் ராமநாதன் மூத்த நுரையீரல் மருத்துவர், டாக்டர்.ராம் ணி ராஜகோபாலன் – தலைவர், தீவிர சிகிச்சைப்பிரிவு எஸ்.ஆர்.எம்.சி, டாக்டர். பிரதீப் ரங்கப்பா – மூத்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர், மணிப்பால் மருத்துவமனை, யஸ்வந்த்புர், டாக்டர். ஜேக்கப் வர்கீஸ் – தலைவர், தீவிர சிகிச்சைப்பிரிவு, ராஜகிரி மருத்துவமனை ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img