கோவை பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த 64-வது குடியரசு தின ‘பி மண்டல’ விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத் தைப் பெற்றனர்.
கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாக மைதானத் தில் ராமநாதபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஒருங் கிணைப்புடன் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
31 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என தனித் தனியாக மாணவ, மாண விகளுக்கு போட்டிகள் நடந்தன.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் 50 பேர் பங்கேற்றனர். 61 தங்கம், 30 வெள்ளி, 12 வெண்கலம், 3 பேருக்கு தனி நபர் சாம்பியன் என இப்பள்ளி மாணவர்கள் பதக்க வேட்டையாடினர். இதனால் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இப்பள்ளி மாணவ, மாணவிகள் கைப்பற்றினர்.
இப்பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், முதல்வர் எஸ்.செலின் விநோதினி வென்ற மாணவர்களைப் பாராட்டினர்.