இந்தியாவில் முதன்மை யான மேலாண்மைக் கல்வி நிறுவனமாக புகழ் பெற் றிருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மென்ட், சென்னை, அதன் 19-வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
விழாவில் PGPM 2023 (Awesome Ahoms), PGDM 2021 – 23 (Chalukyas), PGXPM 2021 – 23 (Neos), and PGPM (Flex) 2020 – 22 (Explorers) ஆகிய பேட்ச்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு கல்வித்திட்டங் களைச் சேர்ந்த 620 மாண வர்கள் பட்டங்களைப் பெற் றனர். சாதனை மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கிரேட் லேக்ஸ் ஆஃப் மேனேஜ்மென்ட் டீன் மற்றும் முதல்வர் டாக்டர் சுரேஷ் ராமநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் சையன்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவரும் அதன் இயக்குநர் குழு உறுப்பி னருமான பிவிஆர் மோகன் ரெட்டி பேசியதாவது:
வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக ஆவதற்கு பேரார்வமும், பெரும் கனவும், சிறப்பானதை உருவாக்க வேண்டுமென்ற தொடர் உந்துதலும், செழுமையடைய வேண்டுமென்ற விருப்பத்துடன், விடாமுயற்சியும் மற் றும் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை அதற்கு திரும்ப பங்களிப்பாக வழங்க வேண்டுமென்ற மனஉறுதியும் இருக்க வேண்டும்.
உலகெங்கிலும் உத்வேகமளிக்கின்ற பணி வாய்ப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை, ஸ்டார்ட் அப்கள் உட்பட, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பிசினஸ் நிறுவனங்களாலேயே உரு வாக்கப்படுகின்றன. ஒரு புதிய அத்தியாயத்தை வாழ்க்கையில் தொடங்குகின்றபோது இந்த தொழில்முனைவு நிறுவனங்களும் ஆரம்பமாகின்றன.
இவை ஒருங்கிணையும்போது ஒளிமயமான எதிர்காலத்தையும், அளப்பரிய சாதனைகளையும் நம்மால் வசப்படுத்த முடியும் என்றார்.
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் தலைவர் மோகன் லக்கம்ராஜு ஊக்குவித்து பேசினார்.



