fbpx
Homeபிற செய்திகள்மீன்வியாபாரம் செய்ய குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்

மீன்வியாபாரம் செய்ய குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்

தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக 2023-2024ம் ஆண்டில் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடி பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன்வியாபாரம் மேற்கொள்ள குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி வழங்கினார்.

இவ்விழாவில் நா.மா.வேல்முருகன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கடலூர், நித்திய பிரியதர்சினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், .யுவராகினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் .சிவசூரியன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர், பெருமாள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இத்திட்டத்தின் கீழ் அலகிற்கான மொத்த தொகை ரூ.75 ஆயிரத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத அரசு மானிய தொகை ரூ.30,000 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.90,000 மற்றும் மீனவ மகளிருக்கு 60 சதவீத மானிய ரூ.45,000 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.1,35,000 என கீழ்க்கண்ட மீனவர் கூட்டுறவு சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

படிக்க வேண்டும்

spot_img