fbpx
Homeபிற செய்திகள்நீருக்குள் கிடந்த துர்க்கை அம்மன் சிலை மீட்பு

நீருக்குள் கிடந்த துர்க்கை அம்மன் சிலை மீட்பு

புவனகிரி வெள்ளாற்றில் தண்ணி ருக்குள் கிடந்த துர்க்கை சிலையை மீட்டு போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி நகரின் வழியாக ஓடும் வெள்ளாற்றில் தண்ணீருக்குள் சிலை ஒன்று கிடந்தது.ஆற்றுக்குச் சென்ற சிலர் இதைப் பார்த்து விட்டு புவனகிரி வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வருவாய் துறையினர் உத்தரவின் பேரில் சிதம்பரம் தீயணைப்புத் துறை அலுவலர் பிரபாகரன் தலைமையில் புவனகிரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றின் பாலத்தின் மீது கயிறை கட்டி கீழே இறங்கி தண்ணீரில் ரப்பர் டியூப்பில் மிதந்தபடி சிலையை கயிற்றால் கட்டினர்.

பின்னர் தண்ணீருக்குள் இருந்த சிலையை தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் மேலே இழுத்தனர். இந்த சிலை சுமார் 3 அடி உயரம் கொண்ட கற்சிலை.

கல்லால் செதுக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலையின் தலையில் உள்ள கிரீடம் பகுதி லேசாக உடைந்து காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சிலையை பாது காப்பாக துணியில் சுற்றி எடுத்துச் சென்று புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

இந்த சிலை எப்படி ஆற்றுக்குள் வந்தது என்பது குறித்து வருவாய் துறையினரும்,காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img