ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சீக்கராஜபுரம் ஊராட்சி பெல் அண்ணா நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 மகளிர் சுய உவிக்குழு பெண்களுக்கு ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் சுய தொழில் செய்வதற்கு வங்கி கடனுதவிக்கான ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்வில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வாலாஜா ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் முருகன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா மற்றும் பலர் உள்ளனர்.



