fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் என்.எஸ்.ஐ.டி, எம்.ஜி.எம் மற்றும் கோர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் நாமக்கல் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. இதில் நாமக்கல் அரவிந்த் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கி உதவி செய்தனர்.

இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் சிகிச்சை பெற்றதோடு, 200க்கும் மேற்பட்ட நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


முகாம் ஏற்பாடுகளை கவனித்த அனைவருக்கும் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நினைவு பரிசு வழங்கினார்.

இம்முகாமில் நாமக்கல் சௌத் இந்தியா டிரான்ஸ்போர்ட் நிறுவனத் தலைவர் எம்.முருகேசன், எம்.நடராஜன், எம்.சந்திரசேகரன், எம்.ராதாகிருஷ்ணன், சுந்தரேசன், ராஜேஷ், அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் மேலாளர் கே.ஜவஹர் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img