fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கு அறிமுக பயிற்சி

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கு அறிமுக பயிற்சி

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு முதுநிலை மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி நிகழ்ச்சி முன்னாள் மாணவர் கோல்டன் ஜூபிலி அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் டாக்டர் என். யசோதா தேவி வரவேற்றார்.


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி. சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லூரியின் முதன்மைக் கல்வி அலுவலர் டாக்டர் என்.ஆர். அலமேலு ராமச்சந்திரன், முதுநிலை கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பினோகிள்.ஏஐ நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கௌஷிக் ஹட்டி, செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் அறிவாற்றல் மற்றும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பீ. ஹாரதி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img