இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 669 பள்ளிகளிலும் மதிய சத்துணவு திட்டம் 764 பள்ளிகளிலும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்திட்டத்தில் மாணாக்கர்களுக்கு உணவு வழங்கப்படும் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் சந்திரகலா முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய சத்துணவு திட்ட பணிகளில் ஆய்வு செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். ஆய்வு குறைவாக மேற்கொண்ட அலுவலர்களும் அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வு செய்தால் தான் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். சமையல் தயாரிப்பாளர்கள் முறையான பணிகளை மேற்கொள்ள வழிவகை ஏற்படும் என கூட்டத்தில் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்ட ஆய்வுகளை முறையாக செய்தால் குழந்தைகளுக்கு செய்யப்படும் சமையலின் தரம் சுவை பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் தரம் இவற்றை கண்காணித்து குறைபாடுகள் இருந்தால் உடனுக்குடன் சரி செய்ய முடியும்.
பள்ளி மாணவர்களுக்கான உணவு திட்டம் சரியான பாதையில் எவ்வித பிரச்சனை இல்லாமல் நடைமுறைப்படுத்துவது உறுதி செய்ய செய்யப்படும். இவற்றில் குறைகள் இருந்தால் உடனுக்குடன் தன் கவனத்திற்கு கொண்டு வரவேண் டுமென கேட்டுக் கொண்டார்.
அதேபோன்று. உணவு பொருட்களின் தரம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் எடை அளவு இவைகளை ஆய்வுகளின் பொழுது பார்க்க வேண்டும். தரமான முட்டை விநியோகிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வின் போது உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தெரிவித்தார்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்வதையும் தாண்டி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



