யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் சர்வதேச பூமி தினம் மற்றும் சர்வதேச புத்தக தின விழா கிளை சேர்மன் மகேந்திரன் தலைப்பில் ஈரோடு அரிமா சொசைட்டி மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் நடைபெற்றது. கிளை செயற்குழு உறுப்பினர் பாபு வரவேற்புரை ஆற்றினார்.
சேர்மேன் மகேந்திரன், இல்ல ஒருங்கிணைப்பாளர் ஜமுனா, ஆசிரியர் மாதேஷ், மணிமேகலை, மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயப்பிரியா சுகுமார், ஆதேஷ், க்யூ பிரிவு முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், கிளை சுற்று சூழல் உறுப்பினர் டாக்டர் ஐயப்பன், கிளை செயலாளர் டாக்டர் ராஜா உரை ஆற்றினர்.
இல்ல குழந்தைகளுக்கு இரவு உணவினை ஜெயப்பிரியா சுகுமார் வழங்கினார். நிகழ்ச்சியை கிளை தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் மற்றும் இணைச் செயலாளர் ராஜ சூர்யா ஏற்பாடு செய்தனர்.



