fbpx
Homeபிற செய்திகள்அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி: செய்தியாளர்களுடன் சென்று ஆட்சியர் ஆய்வு

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி: செய்தியாளர்களுடன் சென்று ஆட்சியர் ஆய்வு

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் பாராஞ்சி ஊராட்சியில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது.

நெற்களம் அமைக்கும் பணி 7.72 லட்சம் மதிப்பீட்டிலும், பாராஞ்சி காலனி தெருவில் ரூ.3.97 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பாராஞ்சி பெரிய மோட்டூர் பகுதியில் ரூ.6.16 லட்சம் மதிப்பீட்டில் குளம் சீரமைப்புப்பணி ஆகிய திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பார்வையிட்டார்.

பணிகளை குறித்த காலத் தில் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்குவிட அதிகாரிகளை அறிவுறுத்தினார். நந்திவேடுதாங்கல் ஊராட்சியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஊராட்சி மன்றச் செயலாளர் அலுவலகம் கட்டு மானப்பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான சமையல் கூடம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.

இச்சிப்புத்தூர் ஊராட்சி அமீர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், புதிய சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

நரசிங்கபுரம் ஊராட்சி

சாவடிக்குளம் ரூ.7.45 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். கீழ்குப்பம் ஊராட்சியில் அம்ம £வாந்தாங்கல் கிராமத்தில் ரூ.30.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடப்பணிகளையும், காவனூர் ஊராட்சி நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன் றிய குழுத்தலைவர் நிர்மலா சௌந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ரமேஷ் சௌந்தரராஜன், பொறியாளர் துரைபாபு, வட்டாட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட அலுவலக மேலாளர் பாபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்தியா துரைராஜ், ரவி, ஜோதி வரதராஜு, பத்மநாபன், பிரவீன்குமார், தனலட்சுமி சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img