வளர்ந்து வரும் சந்தையில் மின்சார வாகனங்களுக்காக அனைவராலும் நன்கு அறியப்பட்ட இந்தியாவின் MG மோட்டார் நிறு வனத்தின் ZS EV மின்சார வாகனங்கள் அனைவரையும் கவரும் வகையிலான அம்சங்கள் மற்றும் அதன் செயல்திறன் ஆகியவற்றால் மிகவும் விரும்பப்படும் வாகனமாக மாறியுள்ளது.
ட்ரூம் அனாலிஸிஸ் படி அந்த விலை வரம்பில் போட்டியிடும் மற்ற SUVக்களுடன் ஒப்பிடும் போது, ZS EV ஆனது அதிக மறுவிற்பனை மதிப் பைக் கொண்டுள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் கோனா போன்ற அதன் பிரிவில் உள்ள மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும் போது, MG ZS EV-ன் உடனடி முறுக்குவிசை மற்றும் அதிகபட்ச 177 PS ஆற்றல் வெளியீடானது வாகனத்தை 8 வினா டிகளில் 0-100 ஐ அடைய உதவுகிறது.
MG ZS EV ஆனது 141 குதிரைத்திறன் மற்றும் 353 Nm முறுக்குவிசையை உருவாக்கும் மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளது.
அத்துடன், பலதரப் பட்ட ஓட்டுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதிகபட்ச செயல்திறனை வழங்குவதற்கும் ஏற்ற வகையில் (இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்) மூன்று வகையான டிரைவிங் மோட் உடன் வருகிறது.
பெரும்பாலும், வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்குவதற்கு முன் மறு விற்பனை மதிப்பை நன்கு ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறார்கள். எனவே, ICE இன்ஜின்கள் மற்றும் EVகள் இரண்டிலும் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சில SUVs களின் மறுவிற்பனை மதிப்பை ஒப்பிட்டைப் பார்க்கின்றனர்.