fbpx
Homeபிற செய்திகள்வேளாண் வணிகம், விற்பனை, பொறியியல் துறை செயல்பாடு ராணிப்பேட்டை ஆட்சியர் செய்தியாளர் பயணத்தில் ஆய்வு

வேளாண் வணிகம், விற்பனை, பொறியியல் துறை செயல்பாடு ராணிப்பேட்டை ஆட்சியர் செய்தியாளர் பயணத்தில் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ராணிப் பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் (E-NAM) குறித்தும், விற்பனைக்காக வேளாண் விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயி கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்தல், தரம் பார்த்தல், வியாபாரிகளால் எவ்வாறு மொபைல் செயலி மூலம் விலை குறிக்கப்படுகிறது, விலை உறுதி செய்தல், உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச விலை விவசாயிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப் பப்படுதல், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புதல் ஆகியவற்றை செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

சோளிங்கர் ஒன்றியம் வேலம் ஊராட்சியில் வெங்கடேசன் என்பவர் இரண்டு ஏக்கர் நிலத்தில் காய்கறி செடிகள் பயிர் செய்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரூ. 2.80 லட்சம் மதிப்பீட்டில் 0.5 ஹெக்டேர் பரப்பளவில் நிரந்தர கல் பந்தல் அமைத்து காய்கறிகள் உற்பத்தி கட்டமைப்பினை பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இந்த முறையில் பாகற்காய், புடலங்காய் போன்ற கொடி வகை காய்கறிகள் விளைவிக்கிறேன். குடும்பத்துடன் இணைந்து விவசாயம் செய்து நல்ல முறையில் சம்பாதிக்கி றோம். சந்தோஷமாக விவ சாயம் செய்கிறோம் என விவசாயி தெரிவித்தார்.

கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக் காய் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
பின்னர் விவசாயிக்கு நிரந்தர கல்பந்தல் அமைத்த தற்கு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பாக ரூ. 1 லட்சம் அரசு மானியம் தொகைக்கான ஆணை யினை மாவட்ட ஆட்சியர், விவசாயிக்கு வழங்கி வாழ்த்தினார்.

சோளிங்கர் ஒன்றியம் கேசவணங்குப்பம் ஊராட்சியில் கே.பிரவீன் குமார் என்ற விவசாயி வேளாண் பொறியியல் துறையின் மூலம் 5லீஜீ திறன் கொண்ட சோலார் பம்ப் செட் ரூ.2.73 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து போர்வெலின் மூலம் தண்ணீர் பெற்று விவ சாயம் செய்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயின் பங்களிப்பு 30 சதவீதம் ரூ.86,000, அரசு மானியம் 70% ரூ.1.87 லட்சமும் விவசாயிக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 எண்ணிக்கையில் சோலார் பேனல்கள் அமைக்கப் பட்டுள்ளன. போர்வெல் பம்ப் செட் இயங்கிட தேவையான மின்சாரம் முழுமையாக இதிலிருந்து கிடைக்கப்படுகிறது என விவசாயி தெரிவித்தார்.

கொடைக்கல் ஊராட்சி

சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கல் ஊராட்சியில் கலைஞரின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் வைத்திருந்த 20 விவசாயிகளை ஒருங் கிணைத்து சுமார் 27 ஏக்கர் பரப்பிலான தரிசு நிலத்தினை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, வேளாண் பொறியியல் துறை மூலம் ரூபாய் 6.45 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல்கள் அமைத்து மின் இணைப்பு தட்கல் முறையில் பெறப்பட்டு தற்போது போர்வெல் மூலம் தண்ணீர் வருகிறது.

இங்கே விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் சப்போட்டா, கொய் யா, போன்ற பழமரச் செடிகள் வழங்கப்பட்டு நடப்பட உள்ளன. இதற்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன என வேளாண்துறை அலு வலர்கள் தெரிவித்தனர்.

வாலாஜா ஒன்றியம் தகரக்குப்பம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட் டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நேரடி நெல் விதைப்பு கருவிகளையும், தென்னை மரம் ஏறும் கருவி, ரோட்டாவேட்டர் கருவி, 15 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், நெல் அறுவடைக்குப்பின் பயிர் செய்திட உளுந்து பயிறு விதைகள் ஆகிய அரசின் நலத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர், விவ சாயிகளுக்கு வழங்கி விவசாயத்தை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான பெண் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வருகிறது. 18 வயது நிரம்பாத பெண் பிள்ளை களுக்கு திருமணம் செய்வது குற்றமாகும்.

திருமணம் செய்து குடும்பம் நடத்திட செய்வது அவர் களின் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பழைய காலத்தில் இருந்தது வேறு இன்றைய நவீன காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை உங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதை உணர்ந்து அவர் களை கல்லூரி படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும். பெண்கள் நினைத்தால் அனைத்தையும் தடுக்கலாம் என்றார்.

ஆய்வின்போது இணை இயக்குநர் வேளாண்மை பி.வடமலை, துணை இயக்குனர்கள் விஸ்வநா தன், லதா மகேஷ், உதவி இயக்குனர்கள் .பெரு மாள், .சண்முகம், பாலாஜி, வேளாண் அலுவலர்கள் சுரேஷ் குமார், நித்யா, வேளாண் உதவி பொறியாளர்கள் ரூபன் குமார், ரவிக்குமார், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img