கோவை மாவட்டம், துடியலூர் கூட்டு றவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், ,கூட்டுறவுத் துறையின் சார்பில் 56 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.64 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் கிராமப்புற பெண்கள் அதிகளவில் சுய தொழில் செய்து அவர்களது பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்ள வாய்ப்பாக கூட்டுறவுச் சங்கங்கள் அமைந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள கடன் வழங்கும் சங்கங்களான 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக்குழு கடன் வழங்கி வருகிறது.
சுய உதவிக்குழுக்கள் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும் தமிழ்நாடு அரசு 31.03.2021 அன்று நிலுவையுள்ள சுய உதவிக்குழுக்கடன்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் 22,699 எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2021&2022 ஆண்டில் 1,643 சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.22.40 கோடியும், நடப்பாண்டில் 31.01.2023 வரை 74 சுய உதவிக் குழுவில் 1571 உறுப்பினர்களுக்கு ரூ. 23.19 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நேற்று (பிப்.14) நடைபெற்ற நிகழ்ச்சியில்,கூட்டுறவுத்துறையின் சார்பில் 56 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.64 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு சேவா ஸ்தாபன மேலாண் இயக்குநர் சிவக்குமார், மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.26,390 தள்ளுபடி
வீரபாண்டிபுதூர் பகுதி அன்னைதெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அமுதா கூறியதாவது:
வீரபாண்டிபுதூர் பகுதியில் வசிக்கும் 15 மகளிர் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அன்னைதெரசா மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மாவு அரைத்தல் மற்றும் துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறோம்.
இத்தொழில் தொடங்குவதற்காக வீரபாண்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாவு அரைத்தல் மற்றும் துணி வியாபாரம் செய்யும் தொழில் தொடங்குவதற்காக ரூ.1 லட்சம் கடனுதவி பெற்றோம்.
அதில் தற்போது ரூ.26,390 கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கான ஆணையிட்டு செயல்படுத்திய முதல்வருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் நன்றி என்றார்.
“விரைவில் மீள்வோம்”
நாய்க்கனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சத்தியா சாய் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அனிதா கூறியதாவது:
நாய்க்கனூர் பகுதியில் வசிக்கும் 12 மகளிர் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஸ்ரீ சத்தியா சாய் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மாவு அரைக்கும் இயந்திரம் கொண்டு மாவு அரைக்கும் தொழில் செய்து வருகிறோம்.
இத்தொழில் தொடங்குவதற்காக வீரபாண்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாவு அரைக்கும் தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சம் கடனுதவி பெற்றோம். அதில் தற்போது ரூ.5,37,145 கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
சுயஉதவிக்குழுக்கள் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கான ஆணையிட்டு செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி என்றார்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கி. மோகன்ராஜ்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கோயம்புத்தூர் மாவட்டம்.