fbpx
Homeபிற செய்திகள்கோவை என்.ஜி.பி. கலை கல்லூரி- மிராண்டா ஹவுஸ் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை என்.ஜி.பி. கலை கல்லூரி- மிராண்டா ஹவுஸ் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மிராண் டா ஹவுஸ் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மிராண்டா ஹவுஸ் கல்லூரி தேசிய தரவரிசைக் கட்டமைப்பில்(NIRF) தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை, ஆசிரியர் மற்றும் மாணவர் அறிவுசார் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கம £கக் கொண்டுள்ளது.

இன்று (பிப்.16) டெல்லி பல்கலைக் கழகத்தில் உள்ள மிராண்டா ஹவுஸில், கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர் டாக்டர். வெ. ராஜேந்திரன், மிராண்டா ஹவுஸ், கல்லூரிமுதல்வர், பேராசிரியர் பிஜயலக்ஷ்மிநந்தா ஆகியோர், கோவை மருத்துவமைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின், தலைமை செயல் அலுவலர், முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன், முனைவர் மோனிகா தோமர், இயற்பியல் பேராசிரியர், மிராண்டா ஹவுஸ், டெல்லி பல்கலைக் கழகம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img