கோவை சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள சீங்கம்பதி மலை கிராமத்தில் “பத்திரகாளியம்மன்” கோவில் வளாகத் தில் தி.மு.க கோவை தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் ஏற்பாட்டில் பிரம்மாண் டமான சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளில், வரிசையாக பொங்க வைத்து “பொங்கலோ பொங்கல்” முழக்கத்துடன், பாரம்பரிய இசை வாத்தி யங்கள் முழங்க, நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்களின் நடனம் அங்கு சென்ற சுற்றுலா பயணிகளையும் கவர்ந்தது, அவர்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.
தி.மு.க சார்பில் ஒன்றிணைக்கப்பட்ட இந்த திராவிடப் பொங்கல், மலைவாழ் மக்களுக்கு தேவையான பொங்கல் பானைகள், மளிகை பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளும் வழங் கப்பட்டன. மதிய உண வாக அறுசுவை உணவு பரிமாறப்பட்ட நிலையில், இரவில் தடபுடலான அசைவ விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு மலைவாழ் மக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கப்பட்டது.
பாரம்பரிய இசைக்கருவி கள் முழங்க இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ஜாதி, மதங்களைக் கடந்து மனிதநேயத்தை போற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
இதில், எம்எம்டி ஐயாசாமி, போனஸ் பாபு, மத்வராயபுரம் குணா, சீக்கம்பதி ஊர் தலைவர் சொக்கலிங்கம், சிறுவாணி செல்வம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சுற்றுலா பயணிகளும் திரண்டு இந்த விழாவால் சீங்கம்பதி மலை கிராமமே இன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



