fbpx
Homeபிற செய்திகள்ராம்ராஜ் காட்டன் வேட்டிவாரத்தை முன்னிட்டு கலர் சர்ட்டுடன் வேட்டியும் இணைத்து அறிமுகம்

ராம்ராஜ் காட்டன் வேட்டிவாரத்தை முன்னிட்டு கலர் சர்ட்டுடன் வேட்டியும் இணைத்து அறிமுகம்

ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 7 வரை ரூபாய் 595 மற்றும் 695 விலைக்கு கல்ச்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டியுடன், ரூபாய் 395 மற்றும் ரூபாய் 495க்கு லிட்டில் ஸ்டார் கலர் சர்ட்டுடன் வேட்டியும் இணைத்து அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வேட்டி வாரம் 2026ல் விற்பனைக்கு கிடைக்கப்பெறுகிறது.

பண்பாட்டின் வலிமையை வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் ராம்ராஜ் நிறுவனர் கே.ஆர்.நாக ராஜன் கிராமப்புற விவசாய நெசவாளர் வாழ்க்கையை மேம்படச் செய்ய காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உடுத்தும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து இந்த பத்து ஆண்டுகளில் வேட்டி வார கொண்டாட்டத்திற்கு பற்பல வேட்டி ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உழவர்கள் நெசவாளர்கள் இருதரப்பினரும் வாழ்வு வளமாக ராம்ராஜ் முன்னெடுத்த வேட்டி வார கொண்டாட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக அமைய பெற்றிருக்கிறது.

தமிழர் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 2026க்கான முதல் பரிசாக வேட்டிவார கொண்டாட்டத்தில் பெரி யவர்களோடு சிறுவர்களும் உடுத்தி மகிழ இந்த ஆண்டு கலர் சர்ட்டுடன் வேட்டி பார்டர் மேட்சாக ஆண்களுக்கும் அதேபோன்று ரகங்கள் சிறுவர்களுக்கும் சலுகை விலையில் அறிமுகமாகிறது. இது ஒரு பொங்கல் பரிசாக உடுத்தி மகிழ அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பதாயிருக்கும்.

வேட்டி வார ரகங்களின் அறிமுக விழாவில் ராம் ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற் றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், தலைமைச் செயல் நிர்வாகி கள் செல்வகுமார் கணபதி அனைவரும் கலந்து கொண்டனர்.

மேற்கூறிய சலுகைகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும் என்று நிறுவனர் நாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img