கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் ‘உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அப்போது கரூர் பரணி கல்விக் குழுமத்தின் சர்வதே செயல்பாடுகளுக்கு ஜப்பானிய துணைத் தூதர் பாராட்டு தெரிவித்தார்.
பரணி பார்க் கல்வி கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அசோக் சங்கர், பள்ளியின் செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூலை 2025-ல் நடைபெற்ற ஜப்பானிய அரசின் மொழித் தேர்வில் பரணி பார்க் மாணவர்கள் 50-பேர் பங்கேற்றனர். இதில் பரணி மாணவர்கள் இலக்கணம் மற்றும் வாசித்தல் பிரிவுகளில் 120/120 மதிப்பெண்களும், கேட்டல் பிரிவில் 60/60 முழு மதிப்பெண்களும் பெற்று வரலாற் றுச் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தற்போது பரணி மாணவர்கள் 150 பேர் ஜப்பானிய அரசின் மொழித் தேர்வுக்காக ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.
பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக ஜப்பானிய ஒலிம்பிக் விளையாட்டான ஜூடோ (Judo) போட்டிகளில் தென்னிந்திய அளவில் தொடர்ந்து ‘ஒட்டுமொத்த சாம்பியன்’ பட் டத்தை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜப்பானிய துணைத் தூதர் மியாட்டா கென்ஜி பேசுகையில், நூற்றுக்கணக்கான பரணி கல்விக் குழும மாணவர்கள் ஆர்வத்துடன் ஐப்பானிய அரசின் மொழித் தேர்வுக்குத் தயாராகி வருவதையும், ஜூடோ விளையாட்டில் அவர்களின் தொடர் சாதனைகளுக்கும் பாராட்டுக்கள் “ என்றார்.
பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர், ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் அஸ்மத் பாத்திமா, செல்வி, புவனா, கிரிஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிறைவாக அறக்கட்டளை உறுப்பினரும் ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் செயலருமான சுபாஷினி நன்றியுரை வழங்கினார்.



