கோவை- கேரளா எல்லையான வாளையாறு, வலுக்கல் பகுதிகளில் புதிய போலீஸ் சோதனைச் சாவ டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் திறந்து வைத்தார்.
கோவை – கேரளா எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இதில் கோவையிலிருந்து கேரளா செல்லும் தங்க நகை வியாபாரிகளை குறி வைத்து அடிக்கடி வழிப் பறி மற்றும் ஹவாலா கடத்தல் சம்பவங்களும் நடைபெற்று வந்தது.

இதனை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எட்டிமடை பகுதியில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண் காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை சுமார் ரூ.2 கோடி அளவிற்கான ஹவாலா பணம் பிடிபட்டுள் ளது. மேலும் பல வழிப்பறி சம்பவங்கள் தவிர்க்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவன நிதி பங்களிப்போடு கோவை – கேரளா எல்லை யான வாளை யாறு, வலுக்கல் ஆகிய 2 எல்லைகளிலும் அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளுடனான புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பயன்பாட்டிற்குதிறந்து வைத்தார். மேலும் வாளை யாறு பகுதியில் ஏ.என்.ஆர் கேமரா பொருத்தப்பட உள்ளது. மேலும் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருப்பதோடு அடிக்கடி வாகன சோதனைகளிலும் ஈடுபட உள்ளனர்.



