கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா இணை மருத்துவ கழகம் மருந்தாக்கியல் கல்லூரியின் சார்பாக, உலக மருந்தாளுநர் தினம் – மருந்தாளுநர் வலுப்படுத்தும் சுகாதார அமைப்பு- மகத்தான தானம் உடல் உறுப்பு தானமே என்ற கருப்பொருளில் கோவை யில் நேற்று (செப்.25) நடந்தது. எஸ்என்ஆர் சன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்து பேசினார்.
கோயம்புத்தூர் ராயல் கேர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி முனைவர் கே.டி.மணிசெந்தில்குமார், சுகாதார அமைப்பின் பல்வேறு பகுதிகளில் மருந் தாளுனர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்றார்.
திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பி.செல்வமணி, அனைவருக்கும் சம ஆரோக்கியம் என்பதின் மூலமே சுகாதாரப் பாது காப்பை மேம்படுத்த முடியும்.
அதற்குரிய தங்களின் பங்களிப் பையும் அதற்கான பல் வேறு களங்களையும் மருந்தாளுனர்கள் ஆராய வேண்டும் என்றார். கோவை பசுமை மருந்தகம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் முனைவர் எல்.பனையப்பன் பேசும் போது, சமுதாய பணிகளில் மருந்தாளுநர்களின் நிலைப்பாட்டை தனது நடைமுறை அறிவால் தெளிவுபடுத்தினார்.
உலக மருந்தாளுனர் தின விழாவையொட்டி, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத் தில் ஸ்ரீராமகிருஷ்ணா மருந் தாக்கியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் பாது காப்பான மருந்து பயன்பாட்டு துண்டுப் பிர சுரங்கள் மற்றும் விரை வில் நலம் பெற கார்டுகளை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சமூகம் மற்றும் சுகாதார அமைப்பில் தங்கள் பங்கை நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டாக மருந்தாளுனர் உறுதிமொழி எடுத்தனர்.
இன்றைய நாளின் கருப்பொருளுக்கு ஏற்ப, கல்லூரி மாணவர்களில் சுமார் 15 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ கழகம், மருந்தாக்கியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறை தலைவர் முனைவர் எஸ். ஸ்ரீராம் வரவேற்றார்.
துணை முதல்வர் முனைவர் எம். கோபால் ராவ் நன்றி கூறினார்.