fbpx
Homeபிற செய்திகள்சைகை மொழி பேச ஊக்குவிக்க கேஎஃப்சி ‘பக்கெட்’ படப் பிரச்சாரம்

சைகை மொழி பேச ஊக்குவிக்க கேஎஃப்சி ‘பக்கெட்’ படப் பிரச்சாரம்

சர்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு, கே.எஃப்.சி இந் தியா பிராண்டு அதன் மிகவும் தனித் துவமான மற்றும் புகழ்பெற்ற பிராண்ட் அடையாளமான ‘பக்கெட்’ படத்தைக் கொண்டு, இந்திய சைகை மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் சைகை மொழி பக்கெட்டில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் வாக்கியங்களை சைகை மொழியில் கற்க தேவையான படிப்படியான காட்சி விளக்க பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் இந்திய சைகை மொழியில் (ISL) எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அதன் வாடிக்கையாளர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கே.எஃப்.சி வழங்குகிறது.

‘ஹலோ’ ‘ப்ளீஸ்’, ‘காலை வணக்கம்’ ‘எப்படி இருக்கிறீர்கள்’, ‘இந்த நாள் இனியதாக அமையட்டும்’, ‘சிரிப்பு’ என்ன ஆச்சு? போன்ற வாக்கியங்கள், எண்கள், அளவுகள் போன்றவை இந்த பக்கெட்டில் இடம்பெற்ற முக்கிய வழிகாட்டுதல்கள் ஆகும்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைகை மொழி பக்கெட்டுகள் இந்த வாரம் முழுவதும், இந்தியாவில் உள்ள அனைத்து கே.எஃப்.சி ரெஸ்டாரண்ட்களிலும் கிடைக்கும்.

கே.எஃப்.சி இந்தியா மற்றும் பார்ட்னர் நாடுகளின், சிஎம்ஓ அபர்ணா பாவல் கூறியதாவது: நிறுவனர், கர்னல் சாண்டர்ஸ், அவருடன் மேசையைப் பகிர்ந்து அமர்வதற்கு அனைவருக்கும் இடமுண்டு என உறுதியாக நம்பினார்.

அவரது நன்மதிப்புகள், நம்பிக்கைகள் இன்றளவும் தொடர்ந்து உத்வேகமளித்து வருகின்றன.கே.எஃப்.சி க்ஷமாதா திட்டம் மற்றும் SpeakSign முன்னெடுப்பின் மூலமாக, செவித்திறன், பேச்சுக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை உட்படுத்திய சூழலை மேம்படுத்துவத்தில் உறுதியாக உள்ளோம்.

சர்வதேச சைகை மொழிகள் தினத்தை முன்னிட்டு, தனித்துவமான அடையாளமான – பக்கெட்டினை – சைகை மொழி கொண்டு மாற்றினோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img