கோவை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ப்ளாசம்ஸ் டிஜிட்டல் டென்டிஸ்ட்ரி கிளினிக் என்ற புதிய பல் மருத்துவமனை வசதியைத் தொடங்கியுள்ளது.
இப்புதிய வசதியை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் தீபானந்தன், அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் அழகப்பன் உள்ளிட்டோர்
முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
இந்த கிளினிக்கில் மேம்பட்ட வாய்வழி ஸ்கேனர்கள், 3-டி மாடல் பிரிண்டர்கள், கேட்,கேம் (CAD CAM) மில்லிங், நேவிகேஷன் இம்பிளண்ட் (Navigation Implant) உபகரணங்கள் மற்றும் எக்ஸோகேட் (EXOCAD) மென்பொருள் ஆகியவை உள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு விரைவான மற்றும் துல்லியமான பல் நோயறிதல் மற்றும் சிகிச்சைகள் குறைந்த கட்டண செலவில் வழங்கப்படுகிறது..
டிஜிட்டல் பல் மருத்துவத்தின் நன்மைகள் துல்லியம், செயல்திறன், தகவல் தொடர்பு, சிறந்த நோயாளி அனுபவம், அதிக நோயாளி ஈடுபாடு, குறைந்த செலவு, விரைவான நோயறிதல் மற்றும் விரைவான சிகிச்சையாகும்.