கோவை, துடியலூர், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஹெல்த்கேர் துறையில் வேலைவாய்ப்புக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவின் ஹெல்த் கேர் நிறுவனமான ஹெல்த் எட்ஜ்ஜின் தலைவர் மற்றும் பொது மேலாளர் டான் வினுக் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார்.
தற்போது ஹெல்த்கேர் துறையில்ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்த பெறுகிறது என்பதனை டான் வினுக் விவரித்தார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி, அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஹெல்த் எட்ஜ்ஜின் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அமிதேஷ் தியாகி, கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் ஹெல்த் எட்ஜ்ஜின் குளோபல் பிராடெக்ட் இன்ஜினியரிங் அண்ட் அப்பேரஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் சதீஷ் லட்சுமணசாமி, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, கல்லூரி மற்றும் தொழில்துறை இணைபின் ஆலோசகர் கணேஷ், துறைத்தலைவர்கள், கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் ஜோசு வா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.