fbpx
Homeபிற செய்திகள்‘ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்’ அறிமுகம்

‘ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்’ அறிமுகம்

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட்(ITI Mutual Fund) நிதித் திட்டம் தனது செயல்பாடுகளை 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதிலிருந்து இந்நிறுவனம் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற 16 பரஸ்பர நிதித் திட்டங்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சொத்து நிர்வகிக்கும் ஏ.எம்.சி. (AMC) நிறுவனமானது மிகவும் பிரபலமான பணப் புழக்கம் அதிகமுள்ள வர்த்தகக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த நிதியம் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி ரூ. 3,557 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது.

மொத்த சொத்து நிர்வாகத் தொகையில் பங்கு சார்ந்த முதலீடு ரூ. 2,674.94 கோடி. இவை தவிர, ஹைபிரிட், முதலீடு 553.45 கோடி, கடன் திட்ட முதலீடு ரூ. 329.34 கோடியாக உள்ளது.

புவியியல் சார் முதலீடு என்று பார்த்தால் முன்னணி 5 நகரங்களின் பங்கு 40.53%, அடுத்த நிலையில் உள்ள 10 நகரங்களின் பங்கு 19.77%, இதற்கடுத்த 20 நகரங்களின் பங்கு 12.27%, அடுத்த 75 நகரங்களின் பங்கு 10.50% ஆக உள்ளது. பிற பங்களிப்பு 16.92%.

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய முதலீட்டுத் திட்டத்தில் (NFO) ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10 வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்புள்ளது.

இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 ஆகவும், பின்னர் ரூ. 1-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜேஷ் பாட்டியா கூறுகையில், “ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் (ITI Flexi Cap) முதலீட்டுத் திட்டமானது, சந்தை சூழலுக்கேற்ப பல்வேறு துறை பங்குகளில் பரவலாக முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பிற தொழில்துறை பங்குகளின் வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு ஏற்ற ஆதாயத்தை கண்கூடாகப் பார்க்க முடியும்.

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு முதலீட்டுத் தீர்வுகளை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வழங்க உள்ளது’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img