தமிழகத்தின் தலை சிறந்த கருத்தரித்தல் மையமான டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளையை திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் கே.என்.என். அருண் நேரு, இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சித்ரா, பொதுச் செயலாளர் முகேஷ் மோகன், பொரு ளாளர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ மையம்
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த் சந்தர் கூறியதாவது:
திருச்சியில் எங்களின் புதிய மருத்துவ மையம், தில்லை நகரில் திறக்கப்பட் டுள்ளது.
இங்கு குறைந்த கட்டணத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையும், எந்தவித கட்டணமும் இல்லாமல் ஐயூஐ சிகிச்சை, 20 சதவீத சலுகையில் ரத்த பரிசோதனை, விந் தணு பரிசோதனை மற்றும் அனைத்து பரிசோதனைகளும் செய் யப்படுகிறது.
இங்கு சிகிச்சை பெறுபவர்கள் இஎம்ஐ முறையில் மருத்துவ கட்டணத்தை செலுத்தும் வசதியும் உள்ளது. அதிநவீன மருத்துவ கருவிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவலியர்கள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் மருத்துவமனை மூலம் குழந்தை இல்லாத லட் சக்கணக்கான தம்ப திகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். குழந்தை இல்லாத தம்பதிகளின் மனக்குறையை போக்கி அவர்களுக்கு முறையான சிகிச்சையை எங்கள் மருத் துவமனை தொடர்ந்து அளித்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத் தவரை மருத்துவமனைக்கு சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட 12 இடங்களிலும் கிளைகள் உள்ளன. தற்போது திருச்சியில் மருத்துவம னையின் 13-வது கிளை திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை யொட்டி 89ஆயிரம் ரூபாய் சலுகை கட்டணத்தில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.