கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத் துறைசார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். உலகளவில் சுவை மிகுந்த ஃபிரட் வகைகளின் மூலம் சமையல் கலைஞர்களின் பெருமைமிகு அடையாளமான பிரத்யேக தொப்பி வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
கலை நுணுக்கம் கொண்ட பல்வேறு வகை ஃபிரட்டின் மூலம் 6 அடி உயரத்தில் தொப்பி உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு சிறிய அளவிலான சமையல் கலைஞர் தொப்பிகள் விதவிதமான வண்ணங்களில் சாக்லேட்டில் தோய்க்கப்பட்டட ஃபிரட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது கேட்டிரிங் துறை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக ஃபிரட் தொப்பிகள் அனைவரின்க வனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிகழ்வானது சிறந்த சமையல் கலைஞர்களை உலகிற்கு அடையாளம் காட்ட கொண்டாடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை இலட்சினையை (LOGO) கல்லூரியின் முதல்வர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வினை உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் எஸ்.தீனா மற்றும் துறைப் பேராசிரியர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.