கோவையில் மலையகம் மற்றும் தாயகம் திரும்பிய தமிழர்த்தான இயக்கம் சார்பில் மலையகம் 200
என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு நடக்கிறது.
இதுகுறித்து மலையக தாயகம் திரும்பிய தமிழர்க்கான இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கந்தையா, தந்தைபெரியார் தி.க.பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து இலங்கைக்கு போனவர்கள் இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும் தமிழ்நாட்டில் தாயகம் திரும்பியவர்களாகவும் முகாம்களில் நாடு அற்றவர் களாகவும், புலம்பெயர்ந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது உரிமைகளை மீட்டெடுக்க கோவை காந்திபுரம் பாத்திமா ஆலய வளாகத்தில் மலையக 200 என்ற பன்னாட்டு மாநாடு 22-ந்தேதி (நாளை) நடக் கிறது.
இதில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ,அமைச்சர் செஞ்சி மஸ்தான், தந்தைபெரியார் தி.க.பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.