கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ஹோட்டலில் ஹௌரா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் இரண்டு மாடல்க ளில் அதிவேக திறன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விழா நடைபெற்றது.
இது குறித்து கௌரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கௌதம், தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் கூறியதாவது :-
கௌரா எலக்ட்ரிக் நிறுவனம் ஜி 5, ஜி6 ஆகிய 2 மாடல்களில் அதிவேக திறன் கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களை அறிமுகபடுத்தி உள்ளது.
இதன் விலை 99 ஆயிரம் ரூபாய் முதல் மற்றும் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரைஆகும். கருப்பு சிவப்பு ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும் .ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
இதன் உச்ச வேகம் மணிக்கு 65 கி.மீ. ஆகும். இந்த ஸ்கூட்டரில் தரமான வித்தியம்பெரஸ் பாஸ்பேட் வேதியல் தொழில் நுட்பத்தில் தயாரான பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இந்திய தட்ப வெப்பநிலைக்கு மிகவும் உகந்தது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.