fbpx
Homeபிற செய்திகள்டிஎல்எப் அடுக்குமாடி குடியிருப்பு ‘தி ஆர்பர்’ அறிமுக விற்பனையில் சாதனை

டிஎல்எப் அடுக்குமாடி குடியிருப்பு ‘தி ஆர்பர்’ அறிமுக விற்பனையில் சாதனை

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப், குருகிராமின் 63வைத்து செக்டாரில் அமைந்துள்ள கோல்ஃப் கோர்ஸ் விரிவாக்கத்தில் அதன் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பான “தி ஆர்பர்” முன் விற்பனையில் 8,000 கோடிகளுக்கு மேலாக விற்பனை புரிந்து சாதனை படைத்துள்ளது.

ஆர்பர் அடுக்கு மாடி குடியிருப்புகள் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்பே மூன்று நாட்களுக்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதன் ஆடம்பர சுற்றுப்புறம் 38 மற்றும் 39 மாடிகள் கொண்ட கோபுரங்களை கொண்டுள்ளது.

இது நன்கு அமைக் கப்பட்ட, விசாலமான மற்றும் நேர்த்தியான 1137 ஒரே மாதிரியான 4 படுக்கையறை, படிப்பு மற்றும் பயன்பாட்டு அறை உள்ளமைவுகளைக் கொண்டுள்ளது, இதன் விலை யூனிட் ஒன்றுக்கு 7 கோடி ரூபாய் முதல் தொடங்குகிறது.

டிஎல்எப் லிமிடெட்

டிஎல்எப் லிமிடெட் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை வணிக அதிகாரியுமான ஆகாஷ் ஓஹ்ரி கூறுகையில், நிகரற்ற இருப்பிடம், விசாலமான குடியிருப்புகள் மற்றும் ஏராளமான வாழ்க்கை முறை வசதிகளுடன், ஆர்பர் சந்தேகத்திற்கு இடமின்றி குருகிராமில் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பாகவும் மற்றும் நகரத்தின் முக்கிய முன்னேற்றங்களில் ஒன்றாக இருக்கும்.

கோல்ஃப் கோர்ஸ் சாலைகள் இயற்கையான விரிவாக்கமாக இருப்பதால், குருகிராமின் மற்ற பகுதிகளுக்கும், டெல்லி மற்றும் ஃபரிதாபாத் ஆகியவற்றிற்கும் தடையற்ற இணைப்புடன், இந்த பகுதி மிகவும் அணுகக்கூடிய இடமாக உருவெடுத்துள்ளது.என்றார்.

படிக்க வேண்டும்

spot_img