fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- 2071 மனுக்கள் குவிந்தன: அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- 2071 மனுக்கள் குவிந்தன: அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி, அரசுத் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாநகரம் – 19, 30, 31 மற்றும் 32வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் டுவிபுரம் 11 வது தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் 1343 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள், 247 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள், 54 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள், 79 நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த மனுக்கள் உட்பட மொத்தம் 2071 விண்ணப்ப மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முகாமை பார்வையிட்டதுடன், மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பய னாளிகளுக்கு உரிய ஆவணங்களை வழங்கினார்.

முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் பாலமுருகன், தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கந்தசாமி, வட்டச் செயலாளர்கள் பத்மாவதி, செந்தில்குமார், பாலகுருசாமி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img