முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன (EV2W) நிறுவனமான PURE EV , அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின் மோட்டார்சைக்கிளான மீநீஷீஞிக்ஷீஹ்யீt-ன் தொடக்க விலை ரூ.99,999/- என்று அறிவித்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் கறுப்பு, சாம்பல், நீலம், சிவப்பு ஆகிய நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கின்றன.
ஹைதராபாத்தில் உள்ள PURE EV நிறுவனத்தின் தொழில்நுட்ப உற்பத்தி மையத்தில் ecoDryft வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது சாலையில் அதிகபட்சமாக 75KMPH, மூன்று ஓட்டும் முறைகளுடன் 130 KM வரை இந்த வாகனம் செல்லும். டிரைவ்-டிரெய்ன் ஏ.ஐ.எஸ். 156 சான்றளிக்கப்பட்ட 3.0 KWH பேட்டரி, ஸ்மார்ட் பி.எம்.எஸ். –
புளூடூத் இணைப்புடன் உள்ளது. 3 KW மோட்டார், CAN அடிப்படையிலான சார்ஜர், கன்ட்ரோலர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மூலம் இது இயக்கப்படுகிறது, இது எதிர்கால மென்பொருள் மேம்படுத்தல்களுக்கான தளத்துக்கும் உதவியாக இருக்கும்.
தலைமை செயல் அதிகாரி
PUREV ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ரோஹித் வதேரா, PURE EV ecoDryft மாடலுக்கான விலையை வெளியிட்டு, “கடந்த இரண்டு மாதங்களில், நாடு முழுவதும் உள்ள எங்கள் விநியோகஸ்தர்களுக்கு 100+ டெமோ வாகனங்களை டெஸ்ட் டிரைவ்வுக்காக அனுப்பியுள்ளோம். அதன் பிறகு நுகர்வோரிடமிருந்து சிறந்த பின்னூட்டத்தைப் பெற்றுள்ளோம்.
எங்களின் அனைத்து விநியோகஸ்தர்களிடமும்ecoDryft க்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு முதல் தொகுதி வாகன டெலிவரி மார்ச் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும்‘’ என்றார்.