fbpx
Homeபிற செய்திகள்எச்சிஎல், எஸ்ஆர்எஃப்ஐ இணைந்து நடத்தும் ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டி

எச்சிஎல், எஸ்ஆர்எஃப்ஐ இணைந்து நடத்தும் ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டி

உலக அலவில் முன்னணி நிறுவனமான எச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (எஸ்ஆர்எஃப்ஐ) இணைந்து, அதன் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப்பை சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் மற்றும் டிரையத்லான் அகாடமியில் கடந்த 8-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் சீன தைபே, ஹாங்காங் (சீனா), ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 10 ஆசிய நாடுகள் பங்கேற்று உள்ளன.

இந்த ஆண்டையும் சேர்த்து, சென்னை ஐந்து முறை சாம்பியன்ஷிப் போட் டிகளை நடத்தியுள்ளது. அனைத்து போட்டிகளும் எஸ்ஆர்எஃப்ஐ ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/indiasquash) மற்றும் எச்சிஎல் இன் ஸ்போர்ட்ஸ் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/HCLForSports/)மற்றும் யுடியூப் சேனலில் (www.you tube.com/user/HCL Enterprise ல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆண்டான 1983 முதல் சிங்கப்பூரில் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், இந்தியா தொடர்ந்து வலுவான நிலையில் செயல்பட்டு வருகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எப்போதும் முதல் நான்கு அணிகளில் இடம்பிடித்துள்ளது. 2011-ம் ஆண்டு இலங்கையின் ரத்மலானாவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற போது, ஆண்கள் அணியில் இந்தியா முதலிடம் பிடித்தது.

அதன் பிறகு 2017-ம் ஆண்டு (ஹாங்காங்) முதலிடம் பிடித்தது. மறுபுறம் இந்திய பெண்கள் அணி 2013-ல் (சியோல், கொரியா) முதல் முறையாக சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்றது.

ஆசிய மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஸ்குவாஷ் வீரர்களுக்கு சிறந்த தரவரிசையை அடைய இந்த போட்டி மேலும் உதவும். சிறந்த ஆசிய ஜூனியர்களுடன் விளையாடுவது இந்திய வீரர்களின் சர்வதேச வெளி ப்பாட்டை அதிகரிக்கவும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.

படிக்க வேண்டும்

spot_img