கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் (கோவை கிளை), எஸ்பிடி மருத்துவம னை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, மூன்றாவது பல்ஸ் ஹார்டத்தான் போட்டியை கோவையில் நடத்தின.
இளைஞர்களிடையே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத் துடன் 5 கி.மீ. தூர விழிப்புணர்வு ஹார்டத் தான் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 1200 மாணவ மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
காலை 6.30 மணிக்கு கோவை ராம் நகர், எஸ்பிடி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய ஹார்டத்தான் நிகழ்வு நேரு ஸ்டேடியத்தில் காலை 7.45 மணிக்கு நிறைவடைந்தது.

போட்டியை 4 பெட்டாலியன் டிஎஸ்பி செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தலைமை விருந்தினராக ரோட்டரி சர்வதேச இயக்குநர் ஏ.கே.எஸ்.முருகானந்தம், மாவட்ட ஆளுநர் செல்லா கே.ராகவேந்திரன், இந்திய மருத்துவ சங்கம் (கோவை கிளை) தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். இதய விழிப்புணர்வு அமர்வுகளை இன்டர்வென்ஷனல் கார்டி யாலஜிஸ்ட் டாக்டர் சுப்பு ராஜா வழி நடத்தினார்.
நிகழ்வை ஆர்.டி.என். குர்பீத் சிங் (நிகழ்வுத் தலைவர்), ஆர்.டி.என். காட்வின் (நிகழ்வுச் செயலாளர்), ஆர்.டி.என். டாக்டர் சித்ரா மனோகர் (ஹோஸ்ட் கிளப் தலைவர்) மற்றும் ஆர்.டி.என். நாகராஜன் (மாவட்டத் தலைவர் – இதய பராமரிப்பு) ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



