டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் ஆராய்ச்சி மைய அறக்கட்டளை, முதுகலை கண் மருத்துவ மாணவர்களுக்கான கல்ப விருக்ஷா 18வது மருத்துவ கருத்தரங்கினை தொடங்கி வைத்தது.
சென்னையில் நடந்த இந்த இருநாள் கருத்தரங்கில் இந்தியா முழுவதிலுமிருந்து 300க்கும் அதிகமான இளம் கண் மருத்துவர்களும், கல்வியாளர்களாக 30 முன்னணி நிபுணர்களும் பங்கேற்றனர்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் தலைமையில் இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை நடத்தும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் அமைப்புக் குழு செயலாளர்களான டாக்டர் எஸ்.சௌந்தரி, டாக்டர் திவ்யா அசோக் குமார் மற்றும் டாக்டர் ப்ரீத்தி நவீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிளக்கோமா (கண் அழுத்த நோய்) கருவிழி, நரம்பியல் சார்ந்த கண் மருத்துவம், கருவிழி ஆகியவை முக்கியமான சிறப்பு பிரிவுகளில் நிபுணர்களான முன்னணி கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களால் இந்த அமர்வுகளும், நேரடி பயிலரங்குகளும் நடத்தப்பட்டன. முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் பேசுகையில், “கண் மருத்துவத்தின் எதிர்காலத்தை உருவாக்க கல்வி ரீதியான நேர்த்தியும், மருத்துவ நிபுணத்துவமும் எப்படி ஒருங்கிணைந்து, செயல்பட முடியும் என்பதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக கல்பவிருக்ஷா திட்டம் திகழ்கிறது, என்று கூறினார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் பேசுகையில், “கண் மருத்துவ கல்வியில் மாறிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒவ்வொரு ஆண்டும் கல்ப விருக்ஷா திட்டத்தை நாங்கள் நிகழ்நிலைப்படுத்தி மெருகேற்றுகிறோம்“ என்று கூறினார்.



