சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் ரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத் தனது இதயவியல் துறையின் கீழ் திறந்திருக்கிறது.
அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை தொடர்பான சோதனை, நிர்வாகம் அனைத்தையும் இம்மையம் கவனித்துக்கொள்ளும். இதுபோன்ற ஒரு தனித்துவமான மையம் அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இது குறித்து காவேரி மருத்துவமனையின் இதய இரத்தநாளம் மற்றும் இதய அறுவை சிகிச்சைத்துறையின் தலைவர் மருத்துவர் அன்பரசு மோகன்ராஜ் கூறுகையில், “ முற்றிய இரத்தக் கட் டியால் ஏற்படும் நுரையீரல் அழுத்த நோய் ஆகிய அபூர்வ பிரச்சனைகளை குறிப்பிடலாம்.
தொடர்ச்சியாக இரத்தக் கட்டிகள் ஏற்படும்போது நுரையீரலுக்குச் செல்லும் தமனிகளை அவை அழுத் தும். இதனால் நுரையீரல் மீதான அழுத்தம் அதிகரித்து, இதயத்துக்குப் பணிச்சுமையை அதிகப்படுத்திவிடும்.
இப்பிரச்சனைகளை இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகளில்தான் குணப்படுத்த இயலும்“ என்றார். காவேரி மருத்துவமனையின் இதய செயல்பாட்டு முடக்கம் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் தலைவர் பி.மனோகர், “பல துறைகளையும் ஒருங் கிணைப்பதே இம்மருத்துவமனையின் பலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை, பல்வேறு உறுப்புகளின் அமைப்பு முறைகளையும் பாதிக்கும் தன்மை உடையது.
எனவே தான் எமது மருத்துவமனையின் மருத்துவர் குழு, நோயாளியின் உடல்நிலையின் ஒவ்வொரு கோணத்தையும் ஆராய்கிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய மருத்துவ மையத் தொடக்க விழா நிகழ்ச்சியில்
காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், “தொலைநோக்குப் பார்வை கொண்ட அணுகுமுறையும் மருத்துவமனையின் வலுவான தலைமையும் நுரையீரல் உயர் இரத்தஅழுத்த மேலாண்மைத் துறையில் நாட்டின் மிகச்சிறந்த மையமாக இதனை ஆக்கும்“ என்றார்.



