முன்னாள் அமைச்சரும் திமுக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவருமான டி.பி.எம்.மைதீன்கான் ஏற்பாட்டில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை மற்றும் நெல்லைபேட்டை பகுதியில் தற்போது கோடைகாலத்தில் பெருகி வரும் பித்தநோய், மஞ்சள் காமாலை போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில் சீந்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பாளையங்கோட்டை பெரியார்நகர், இந்திரா நகர், ஹைகிர வுண்ட் அரசு பொது மருத்துவமனை முன்பு “சீந்தில் குடிநீர்” பிரச்சார ஜீப் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனையொட்டி 9வது நாளாக முன்னாள் அமைச்சர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன் கான் பொதுமக்களுக்கு ‘சீந்தில் குடிநீர்’ வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் தொண்டரணி மாநில துணை செயலாளர் கிறிஸ்துவ உபதேசி எம்பி விஜிலா சத்தியானந்த், மாவட்ட துணை செயலாளர் கிரிஜாகுமார், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எல்.முகம்மது மீரான் மைதீன், மாநில தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் மூக்கையா, ஈரோடு ஆர்.பி.மோகன், ஆதி திராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் நவநீதன், பாளை பகுதி துணைச் செயலாளர் கமாலுதீன், மாநில மாவட்ட பிரதிநிதி கார்டன் சேகர், வட்டக் கழக செயலாளர் பத்மராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுந்தர், நித்யபாலையா, ஆதி திராவிடநலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் பேரங்காடி ஐயப்பன், முன்னாள் வட்டச் செயலாளர் காளிமுத்து, பெரியார் நகர் ஊர் கணக்குப்பிள்ளை பால்ராஜ், பெரியார் நகர் தர்மகத்தா முத்தையா, உதவி கணக்கு பிள்ளைக்கு முனுசாமி, தொ.மு.ச.சுந்தரம், கே.டி.சி. அமல்ராஜ், ஆதிதிராவிடர் நலக் குழு தலைவர் மதுரை வீரன், தலைமைக் கழக பேச்சாளர் பிரிட்டோ அலெக்ஸாண்டர், இந்திரா நகர் மாரியப்பன் ஆகியோர்கள் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.