புகளூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி தலைவர் குணசேகர் தலைமையில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பிரதாபன், ஆணையர் கனிராஜ் நகர்மன்ற இருபால் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தில் 18 தீர்மானங்கள் முன் மொழியப்பட்டது.
அதன்பின் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர், மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து நகர் மன்ற தலைவர் குணசேகரிடம் முறையிட்டனர்.
அவர்களது குறைகள் குறித்து பதிவு செய்து கொண்ட நகராட்சித் தலைவர் குணசேகர் விரைவில் அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.



