fbpx
Homeபிற செய்திகள்காவல்துறைக்கு ‘ஆக்டோபஸ்’ திட்டம் மூலம் புதிய மென்பொருள்- கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தகவல்

காவல்துறைக்கு ‘ஆக்டோபஸ்’ திட்டம் மூலம் புதிய மென்பொருள்- கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஆக்டோ பஸ் என்ற திட்டம் மூலம் குற்றவாளிகளின் தரவுகளை பதிவு செய்ய மென்பொருள் உருவாக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட் பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக ரவிச்சந்திரன் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 36 சவரன் நகை , இன்னொவா கார், 25 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2 சக்கர வாகனத்தில் நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் கோடை விடுமுறைக்கு வெளியே செல்லும் போது ரோந்து காவல்துறையினரிடம் கூற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பகல் நேரங்களில் பெரிய அளவில் கொள்ளைகள் இல்லை.

ஆக்டோபஸ் என்ற திட்டம் மூலம் மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு
குற்றவாளிகளின் தகவல்கள் பதிவு செய்ய சர்வர் நம்மிடமே உள்ளது. பல்வேறு குற்றவாளிகள் குறித்து டிஜிட்டல் முறையில் ஒரு டச்சில் அனைத்து குற்றவாளிகளின் தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Intelligence காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படும் வகையில் இந்த சாப்ட்வேர் வடி வமைக்கப்பட்டுள்ளது. எனவே தகவல்கள் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img