fbpx
Homeபிற செய்திகள்கோடை சீசனை முன்னிட்டு கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் தினமும் களைகட்டும் பிளாக் தண்டர்

கோடை சீசனை முன்னிட்டு கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் தினமும் களைகட்டும் பிளாக் தண்டர்

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அமைந் துள்ள பிளாக் தண்டர் தீம் பார்க்கில் கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் படி தலை இல்லாத சகோதரர்கள் நடனம், கண்ணாடி மனிதன், சீன
சிங்க நடனம், நீண்ட மனிதன் கண்ணுக்கு தெரியாத நாற்காலி,
மாயாஜாலம், வித்தை கோமாளி, பறை அடிக்கிறது, குமிழிசெயல் திறன், உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினர். தொடர்ந்து 30 நாட்கள் இந்த கலை நிகழ்ச்சிகள் மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் தீம் பார்கில் நடைபெறும் என்று செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img